வேப்பூரில் மேம்பாலம் கட்டும் பணி: தாசில்தார் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை பொதுமக்களின் போராட்டம் தள்ளி வைப்பு

வேப்பூரில் மேம்பாலம் கட்டும் பணி தொடா்பாக தாசில்தார் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினாா்.

Update: 2022-08-10 16:38 GMT


ராமநத்தம்,

வேப்பூர் பஸ் நிலையம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 4 மீட்டர் உயரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இதன் வழியாக வாகனங்களில் கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட வேளாண் பொருட்களை எடுத்து செல்ல முடியாது எனவே உயரம் 5 மீ்ட்டர் இருக்கும் வகையில் மேம்பாலம் கட்ட வேண்டும் இல்லை என்றால் போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை வேப்பூா் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா, வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா, ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி திருஞானம், மனுதாரர் கதிர்வேலு, வருவாய் ஆய்வாளர் மாலா, கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தாசில்தார் மோகன் பேசும்போது, இந்த கோரிக்கை தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்