மயங்கி கிடந்த மூதாட்டிக்கு முதலுதவி செய்த பெண் போலீசார்
மயங்கி கிடந்த மூதாட்டிக்கு முதலுதவியை பெண் போலீசார் செய்தனர்.
கரூர் டவுன் போலீஸ் நிலையம் அருகே நேற்று 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி சுயநினைவற்ற நிலையில் கிடந்தார். இதைக்கண்ட பெண் போலீசார் அங்கு ஓடி வந்து மூதாட்டிக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று கரூர் டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.