மத்திய அரசை கண்டித்து தர்மபுரியில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

Update: 2023-08-20 19:00 GMT

தர்மபுரி ஒருங்கிணைந்த கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் தமிழக கவர்னரை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஸ்வரன், மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவகுரு, நகர செயலாளர் நாட்டான் மாது, கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன், மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சந்தர், மேற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ அணி மாநில துணை செயலாளர் ராஜேஷ் பாபு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து தி.க. பொதுச்செயலாளர் துரை சந்திரசேகர், நிர்வாகிகள் பேசினர். இதில் முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர்கள் தர்மசெல்வன், சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் இன்பசேகரன், மாநில நிர்வாகிகள் சூடப்பட்டி சுப்பிரமணி, செந்தில்குமார், மாவட்ட அவைத்தலைவர்கள் செல்வராஜ், மனோகரன், மாவட்ட பொருளாளர்கள் தங்கமணி, முருகன், மாவட்ட துணை செயலாளர்கள் வக்கீல் மணி, உமாசங்கர், ரேணுகா தேவி, ஆறுமுகம், கிருஷ்ணகுமார், ராஜகுமாரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாஜலம், வேடம்மாள், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், வைகுந்தன், மல்லமுத்து, சேட்டு கருணாநிதி, சபரிநாதன், மடம் முருகேசன், செல்வராஜ், கிருஷ்ணன், கோபால், பாலை அன்பழகன், சக்திவேல், அடிலம் அன்பழகன், மாது, சரவணன், முத்துக்குமார், சிவப்பிரகாசம், நெப்போலியன், சந்திரமோகன், சவுந்தர்ராஜன், செங்கண்ணன், ரத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில தீர்மான குழு செயலாளர் கீரை விஸ்வநாதன் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.. தொடர்ந்து மத்திய அரசு, கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பெருமாள் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்