பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

Update: 2023-02-22 19:30 GMT

நாமக்கல்:-

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இடையே பள்ளி, ஒன்றிய அளவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி நேற்று நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணி, உதவி திட்ட அலுவலர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 60 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் முதலிடம் பெறும் 2 பேர், மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படஉள்ளனர். போட்டிக்கு நடுவர்களாக தலைமையாசிரியர் மனோகர், பாரதி, தமிழரசன் ஆகியோர் செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி ஆய்வாளர்கள் பெரியசாமி, கிருஷ்ணகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்