சதுரகிரி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்

பவுர்ணமி, தைப்பூசத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2023-02-05 18:55 GMT

வத்திராயிருப்பு,

பவுர்ணமி, தைப்பூசத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

பவுர்ணமி வழிபாடு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தை மாத பவுர்ணமி மற்றும் தைப்பூச வழிபாட்டிற்காக நேற்று அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு பக்தர்கள் குவிந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் அடிவாரப்பகுதியில் இருந்து மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நடந்து சென்றனர்.

சிறப்பு பூஜை

மேலும் மலைக்கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாமி தரிசனம் செய்த உடனே மலையிலிருந்து இறங்க பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நீரோடைகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

தை மாத பவுர்ணமி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவ குழுவினர் அடிவாரப்பகுதியில் முகாமிட்டு இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்