வேளாங்கண்ணி கடலில் பக்தர்கள் குளிக்க தடை

வேளாங்கண்ணி கடலில் பக்தர்கள் குளிக்க தடை

Update: 2023-08-31 18:45 GMT

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக உள்ளூர், தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலத்திலிருந்து லட்சக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர். வழக்கமாக பக்தர்கள் கடலில் சென்று குளித்து மகிழ்வது வழக்கம். திருவிழா நாட்களில் பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்வர். பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், உயிர்பலி ஏற்பட கூடாது எனவும் நாகை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் விழா நாட்களில் பக்தர்கள் கடலில் சென்று குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு தடுப்புவேலி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு காவல் படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வேளாங்கண்ணி கடற்கரை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்