குத்தாலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்

குத்தாலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்

Update: 2023-02-03 18:45 GMT

குத்தாலம் ஒன்றியத்தில் உள்ள திருவாலங்காடு, கோடிமங்கலம், பாலையூர், கோமல் ஆகிய 4 ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம், புதிய தார் சாலைகள், பள்ளி வகுப்பறை கட்டிடங்களை சீரமைக்கும் பணிகள், செம்மண் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகாதமிழ்ச்செல்வன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, கஜேந்திரன் மற்றும் பணிமேற்பார்வையாளர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்