சிக்கல் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள்

சிக்கல் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள்

Update: 2022-11-06 18:45 GMT

சிக்கல் ஊராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ே்நரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு

நாகை ஊராட்சி ஒன்றியம் ‌சிக்கல் ஊராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து சிக்கல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.94 லட்சம் மதிப்பீட்டில் மயான கொட்டகை சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிவடைந்ததையும், 15-வது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடந்துவரும் அரசு துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டுமான பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் பனைமேடு பகுதியில்‌ அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்.

மண்புழு உரம் தயாரிக்கும் கூடம்

15-வது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.3.2 லட்சம் மதிப்பீட்டில் சங்கமங்கலம் செல்லும் சாலையில் மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் மற்றும் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரிக்கும் கூடம் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தேமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு கூடம் அமைக்கும் பணி முடிவடைந்ததையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.86 லட்சம் மதிப்பீட்டில் ஆழியூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்