டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-09-21 19:08 GMT

புகழூர் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊா்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை புகழூர் நகராட்சிப் பொறியாளர் மலர்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகராட்சி அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நகராட்சி வளாகத்தை வந்தடைந்தது.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். இதில், துப்புரவு ஆய்வாளர்வள்ளி முத்து, பணி மேற்பார்வையாளர் ரவி டெங்கு ஒழிப்பு குழுவினர், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்