கோனேரிபட்டியில்ரூ.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Update: 2023-08-16 19:15 GMT

தேவூர்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கோனேரிபட்டி உப கிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. கோனேரிபட்டி, அம்மாபேட்டை, சித்தார், தேவூர், காவேரிப்பட்டி, குருவரெட்டியூர், குள்ளம்பட்டி, வட்ராம்பாளையம், பூமணியூர், மோட்டூர், கொட்டாயூர், நல்லதங்கியூர், கல்வடங்கம், சென்றாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தி விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.6,369 முதல் ரூ.7,592 வரை ஏலம் போனது. மொத்தம் 1, 900 பருத்தி மூட்டைகள் ரூ.50 லட்சத்துக்கு விற்பனை ஆனது.

Tags:    

மேலும் செய்திகள்