இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற வடமாநில வாலிபர்.. திருப்பத்தூரில் பரபரப்பு
பேருந்தில் இருந்து பயணிகள் இறங்கிக் கொண்டு இருந்தனர். அவர்களுடன் இளம்பெண் ஒருவரும் இறங்கினார்;
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பேருந்து நிறுத்தத்தில் நேற்று திருப்பத்தூர் பகுதியில் இருந்து வேலூர் நோக்கி சென்ற பேருந்து நின்றது. அப்போது பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கிக் கொண்டு இருந்தனர். அவர்களுடன் இளம்பெண் ஒருவரும் இறங்கினார். இதனை பார்த்த வாலிபர் ஒருவர் ஓடிச்சென்று அந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப்பெண் கூச்சல் போட்டார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.