கோனேரிப்பட்டியில் ரூ.80 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

கோனேரிப்பட்டியில் ரூ.80 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

Update: 2022-07-28 22:54 GMT

தேவூர்:

கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தின் பருத்தி விற்பனை சேவை மையத்தில் பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்தில் எடப்பாடி, நெடுங்குளம், கல்வடங்கம், கொட்டாயூர், நல்லங்கியூர், பாலிருச்சம்பாளையம், பொன்னம்பாளையம், பூமணியூர், பூதப்பாடி, அம்மாபேட்டை, காவேரிபட்டி, கொட்டாயூர், தேவூர், கோனேரிப்பட்டி பகுதி விவசாயிகள் பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் பி.பி.டி. ரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.9 ஆயிரத்து 891 முதல் அதிகபட்ச விலையாக ரூ.10 ஆயிரத்து 802 வரை ஏலம் போனது. மொத்தம் 2,050 பருத்தி மூட்டைகள் ரூ.80 லட்சத்துக்கு ஏலம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்