இலங்கை தமிழர்களுக்கு 321 வீடுகள் கட்டும் பணி; கலெக்டர் விசாகன் ஆய்வு

திண்டுக்கல் அருகே இலங்கை தமிழர்களுக்கு 321 வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் விசாகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-05-31 16:12 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு முகாம்கள் இருக்கின்றன. இவற்றில் தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய 3 முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக தோட்டனூத்து கிராமத்தில் ரூ.15 கோடியே 89 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த மறுவாழ்வு முகாம் அமைக்கப்படுகிறது.

இங்கு இலங்கை தமிழர்களுக்கு 321 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமான பணிகளை கலெக்டர் விசாகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், கிழக்கு தாசில்தார் சந்தானமேரிகீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலரவன், கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்