வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பழச்செடிகள் தொகுப்பு

கடையம் அருகே வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பழச்செடிகள் தொகுப்பு வழங்கப்பட்டது.

Update: 2023-10-22 18:45 GMT

கடையம்:

கடையம் வட்டாரத்தில் தோட்டக்கலை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் மா, நெல்லி, எலுமிச்சை, சீதா, மாதுளை போன்ற 5 வகையான பழச்செடிகளின் தொகுப்பு 75 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2023-2024-ம் ஆண்டு கலைஞர் கிராமமான துப்பாக்குடியில் தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி தலைமையில், பஞ்சாயத்து தலைவர் செண்பகவல்லி முன்னிலையில் விவசாயிகளுக்கு பழச்செடிகளின் தொகுப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தோட்டக்கலை அறிவியல் விஞ்ஞானி இளவரசன், துப்பாக்குடி பஞ்சாயத்து கிராம நிர்வாக அலுவலர் இசக்கிமுத்து மற்றும் முன்னோடி விவசாயிகளான ஏழுமலை, உலகநாதன், முத்துக்குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானசேகரன், தோட்டக்கலை அலுவலர் ஷபா பாத்திமா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கோவிந்தராஜன், திருமலைக்குமார், பார்த்தீபன், பானுமதி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்