மூத்த அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-06-15 16:23 GMT

சென்னை,

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு வருகிற 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது நாளாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட்டு இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் செந்தில் பாலாஜி மனைவி தரப்பு கோரிக்கையை ஏற்று, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற கோர்ட்டு அனுமதி அளித்தது. தொடர்ந்து ஆட்கொணர்வு மனு மீதான விசாணை 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தற்போது செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்போடு காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் மூலம் அழைத்து வரப்பட்டார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைது விவகாரம், இலாகா மாற்றம் உள்ளிட்டவை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது இல்லத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆலோசனைக்குப் பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்