கமுதி,
கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் ஆடிப்பொங்கல் முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் 2 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் முதல், 2-ம் இடங்களை மாற்றுத்திறனாளி ஆப்பனூர் மாரிமுத்து என்பவரின் காளைகள் பெற்றன. அந்த காளைகளின் உரிமையாளர் மாரிமுத்துவுக்கு ரொக்க பணம், நினைவு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.