பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-12 18:45 GMT

 ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் தெரு உள்ளது. இங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் விழாவையொட்டி தேரோட்ட திருவிழா நடைபெற்றது. அம்மன் அலங்கரிக்கப்பட்ட செப்பு தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்பகுதி மக்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பின்பு அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சிவந்திபட்டி நாடார் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்