சிறுமியை திருமணம் செய்த பனியன் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
பல்லடத்தில், சிறுமியை திருமணம் செய்த பனியன் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பல்லடம்,
பல்லடத்தில், சிறுமியை திருமணம் செய்த பனியன் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுரையைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் கோபாலகிருஷ்ணன்,24, இவர் பல்லடம் பனப்பாளையத்தில் தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவருடன் பணியாற்றும் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் காணாமல் போனார்கள். இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில், இருவரும் மதுரையில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற போலீசார் இருவரையும் விசாரணைக்காக பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையின் போது சிறுமியை கோபாலகிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வழக்கு பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. சிறுமியை திருமணம் செய்ததால் கோபாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.