மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழ்நாட்டை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடைசெய்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் இடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் வனம் தன்னார்வ அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியம் சார்பில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பறை இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரமும், மஞ்சப்பையும் ெபாதுமக்களுக்கு வழங்கப்பட்டது.