சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழா
சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோவில், நவகைலாயங்களில் கடைசி தலமாகும். இக் கோவிலில் நேற்று பிரதோஷ விழா நடந்தது. இதை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.