போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஜெயங்கொண்டத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2023-02-26 18:51 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொது சுகாதாரம் மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் ஆகியவை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தியது. இதில், கல்லூரி முதல்வர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட புகையிலை கட்டுப்பாடு மைய மாவட்ட ஆலோசகர் டாக்டர் பிரியா, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூகப் பணியாளர் டாக்டர் வைஷ்ணவி ஆகியோர் போதை ஒழிப்பு தொடர்பாகவும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பேசினர். முன்னதாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கல்லூரியில் தொடங்கி முக்கிய வீதிகளில் வலம் வந்து இறுதியில் தனியார் மண்டபத்தில் நிறைவடைந்தது. இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்