அரியலூரில் நீட் தேர்வுக்கு பயந்து மேலும் ஒரு மாணவி தற்கொலை

நாடுமுழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அரியலூரில் நீட் தேர்வுக்கு பயந்து மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Update: 2022-07-16 12:24 GMT

அரியலூர்,

அரியலூர் ரெயில்வே நிலையம் அருகே எத்துராஜ் நகரை சேர்ந்தவர் நடராஜன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நிஷாந்தி கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 529.5 மதிப்பெண் பெற்றுள்ளார். நீட் தேர்வுக்கு படித்துவந்த மாணவி நிஷாந்தி கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.

பின்னர், மீண்டும் முயற்சி செய்வதற்காக இந்த ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு தயாராகிவந்தார். இந்த நிலையில் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவி நிஷாந்தி இன்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மாணவி நிஷாந்தி வீட்டில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், வேதியியல் மற்றும் உயிரியில் பாடங்கள் கடினமாக உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாவும், தந்தை வெளிநாட்டில் இருந்து வந்து ஊரிலேயே இருக்க வேண்டும் என்று மாணவி எழுதி வைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்