வழக்குகளுக்காக சமரச மையத்தில் பங்கேற்கும்போது இரு தரப்பினருக்கும் சுமுகமான சமநிலை தீர்வு ஏற்படுத்தப்படுகிறது; நீதிபதி பேச்சு

வழக்குகளுக்காக சமரச மையத்தில் பங்கேற்கும்போது இரு தரப்பினருக்கும் சுமுகமான சமநிலை தீர்வு ஏற்படுத்தப்படுகிறது என்று நீதிபதி பேசினார்.

Update: 2023-04-14 18:51 GMT

ஜெயங்கொண்டம்:

விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச மையத்தின் 18-ம் ஆண்டு தொடக்க விழா குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மத்தியஸ்தம் மற்றும் சமரச மைய தலைவரும், அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான மகாலட்சுமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு சமரச மையம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு வரை கிட்டத்தட்ட 350 வழக்குகள் அரியலூர் மாவட்ட கோர்ட்டில் இருந்து சமரச மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சமரசம் பேசி பிரிந்த குடும்பங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு மீண்டும் சேர்ந்து வாழ இந்த சமரச மையத்தால் குடும்ப நல நீதிமன்ற வழக்குகளில் ஏற்பாடு செய்யப்பட்டது.

கால விரயம் ஏற்படாது

மேலும், சமரச மையத்தில் முடிவு பெறும் வழக்குகளில் நீதிமன்ற கட்டணம் கிடையாது. மேல்முறையீடு செல்ல தேவையில்லை. இரு தரப்பினர்களுக்கும் சமரச மையத்தில் பங்கேற்கும் போது கால விரயம் ஏற்படாது. மேலும் சமரச மையத்தில் பங்கேற்கும்போது இரு தரப்பினர்களுக்கும் சுமுகமான சமநிலை தீர்வு ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதி லதா, சமரசமைய ஒருங்கிணைப்பாளர் அழகேசன், குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜசேகரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேஷ், ஜெயங்கொண்டம் வழக்கறிஞர்கள், பொதுமக்கள், நீதிமன்ற பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்