புதிய பாடப்பிரிவுகளில் 8,490 மாணவர்களை சேர்க்க அனுமதி

2023-2024-ம் கல்வியாண்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகளில் 8,490 இடங்களுக்கு அனுமதி அளிக்க என்ஜினீயரிங் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளதாக கல்வியாளர் தெரிவித்தார்.

Update: 2023-04-23 19:35 GMT


2023-2024-ம் கல்வியாண்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகளில் 8,490 இடங்களுக்கு அனுமதி அளிக்க என்ஜினீயரிங் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளதாக கல்வியாளர் தெரிவித்தார்.

என்ஜினீயரிங் கல்லூரி

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-

தற்போதைய நிலையில் தமிழத என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் டேட்டா சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் 8,490 கூடுதல் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகத்திடம் அனுமதி கோரி உள்ளது.

நடப்பு கல்வியாண்டில் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டாசயின்ஸ் பிரிவில் 13,553 மாணவர்களும், தகவல் தொழில்நுட்ப பிரிவில் 15,463 மாணவர்களும், கணினி அறிவியல் பிரிவில் 38,544 மாணவர்களும், சைபர் செக்யூரிட்டி பிரிவில் 1,718 மாணவர்களும், கணினி அறிவியல் மற்றும் மெசின் லேர்னிங் பிரிவில் 1,230 மாணவர்களும் சேர்ப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கூடுதல் மாணவர்கள் சேர்க்கை

தற்போது 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டாசயின்ஸ் பிரிவில் 2,520 மாணவர்களும், ஐ.டி. பிரிவில் 2,280 மாணவர்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 1,800 மாணவர்களும், சைபர்செக்யூரிட்டி பிரிவில் 1,200 மாணவர்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் மெஷின் லேர்னிங்பிரிவில 690 மாணவர்களும் ஆக மொத்தம் 8,490 மாணவர்கள் கூடுதலாக சேர்க்க என்ஜினீயரிங் கல்லூரிகள் அனுமதி கேட்டுள்ளது.

கடந்த காலங்களில் இளநிலை என்ஜினீயரிங் படிப்புகளில் சிறப்பு பிரிவுகள் இருக்கக் கூடாது என்ற நிலை மாறி தற்போது சிறப்பு பிரிவுகள் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. 2027-ம் ஆண்டில் வெளிவரும் என்ஜினீயரிங் பட்டதாரிகளில் 60சதவீதம் பேர் கணினி தொடர்பான பட்டதாரிகளாக இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்