அ.தி.மு.க. சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

அ.தி.மு.க. சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Update: 2023-04-20 19:18 GMT

அ.தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு 10 நாட்களில் முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது. மேலும் கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்து கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதியில் கரூர் மாவட்ட அவைத்தலைவர் திருவிகா தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, மாவட்ட இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன், மாநகர செயலாளர்கள் வி.சி.கே.ஜெயராஜ், சேரன் பழனிசாமி, க.பரமத்தி ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன் உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் தோகைமலை பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதற்கு தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி தலைமை தாங்கி பேசுகையில், கட்சியினை வலுப்படுத்த வேண்டும். கட்சியினுடைய உறுப்பினர்கள் அதிகப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகள், தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார். கரூர் மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் லதா, ஒன்றிய துணைச் செயலாளர் துறைகவுண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்