தாளவாடி அருகே ஜீப் கவிழ்ந்து விபத்து; 9 பேர் படுகாயம்

தாளவாடி அருகே ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-09-10 20:05 GMT

தாளவாடி

தாளவாடி அருகே ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜீப் கவிழ்ந்து விபத்து

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த பைனாபுரம் கிராமத்தை சேர்ந்த 8 பெண்கள் தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள எத்திக்கட்டை பகுதியில் உள்ள விவசாய தோட்டத்துக்கு கூலி வேலை செய்வதற்காக சென்றனர். அங்கு வேலை செய்து விட்டு மீண்டும் அவர்கள் மாலை வீடு திரும்பினர். இதற்காக அவர்கள் தோட்டத்து உரிமையாளர் ஜீப் மூலம் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். ஜீப்பை அத்தாலூ (வயது 45) என்பவர் ஓட்டினார்.

அதில் 8 தொழிலாளர்களும் உட்கார்ந்திருந்தனர். எத்திக்கட்டை பகுதியில் இருந்து சிறிது தூரம் சென்றதும் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

8 பேர் படுகாயம்

இந்த விபத்தில் ஜீப்பின் அடியில் சிக்கி பைனாபுரம் கிராமத்தை சேர்ந்த ரத்தினி (45), பாக்கியம்மா (40), அம்மனம்மா (45), நாகம்மா, (40) சன்னம்மா (41), அமுதா (40), ரத்தினம்மா (43), மாதி (60) என 8 பெண்கள், டிரைவர் அத்தலூ என மொத்தம் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் ஜீப்பில் வந்தவர்கள் வலியால் அலறி துடித்தனர்.

இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்