அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

வீரணாமூர் ஊராட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

Update: 2023-05-28 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றியம் வீரணாமூர் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் பணியாக 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்திய திட்டங்கள், நகர பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டம், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வித்திட்டம், இருளர், பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம், கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை வீரணாமூர் ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்