குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

Update: 2023-08-28 18:08 GMT

கரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் கிருஷ்ணராயபுரம், கடவூர் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி புலியூர் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு முதன்மை கல்வி அலுவலர் சுமதி தலைமை தாங்கினார். போட்டியை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். இதில், மாணவ-மாணவிகள் பங்கேற்று ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்