தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 400 டிரைவர்-கண்டக்டர்கள் விரைவில் நியமனம்
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 400 டிரைவர்-கண்டக்டர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 400 டிரைவர்-கண்டக்டர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களை ஒப்பந்த அப்படையில் பணியமர்த்த போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டே இந்த பணி நியமன அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. இவர்கள் சாலை போக்குவரத்து இன்ஸ்டிடியூட் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "பணியாளர்கள் பலர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் கொரோனாவுக்கு முன்பு இருந்ததை போன்று அனைத்து பஸ்களையும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் கூடுதலாக டிரைவர்-கண்டக்டர்கள் தேவைப்படும். இது போன்ற சூழலை சமாளிக்கவே 400 பேரை புதிதாக தேர்வு செய்ய உள்ளோம். அப்போது தான் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்று தெரிவித்தார்.