175 பேருக்கு ரூ.4½ கோடி கடன்

உத்தனப்பள்ளி, தர்மபுரி கூட்டுறவு வங்கிகளில் 175 பேருக்கு ரூ.4½ கோடி கடனுதவிகளை பதிவாளர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

Update: 2022-12-15 19:30 GMT

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, கிருஷ்ணகிரி மற்றும் கெலமங்கலம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், ரேஷன்கடைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.

இதில் உத்தனப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நகர கிளை ஆகியவற்றில் 175 பயனாளிகளுக்கு, 4.50 கோடி ரூபாய் அளவில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு துறையின் குளிர்பதன கிடங்கு, நடமாடும் ஏ.டி.எம். வாகனம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, கிருஷ்ணகிரி மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம், தர்மபுரி மண்டல இணைப்பதிவாளர் ராமதாஸ், தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சந்தானம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்