கஞ்சா விற்ற 2 பேர் கைது
ஒடுகத்தூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் பகுதிகளில் ஒரு கும்பல் கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது அத்திகுப்பம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இரண்டு பேர் வெவ்வேறு இடங்களில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் அத்திகுப்பம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் அஜித் குமார் (வயது 23), கங்கை அம்மன் கோவில் தெரு வைசேர்ந்த பிச்சாண்டி (39) என்பது தெரிய வந்தது.
அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் இருவரும் தலா 150 கிராம் கஞ்சா இருந்தது. இதனையடுத்து பிச்சாண்டி மற்றும் அஜித் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.