கருப்பு வண்ணத்தில் யமஹா ஆர் 15 வி 3 எஸ்
இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப்பெற்ற மோட்டார் சைக்கிள் பிராண்ட் யமஹா. இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம் ஆர் 15 வி 3 எஸ். இந்த மாடல் இப்போது முழுமையான மேட் கருப்பு நிறத்தில் அறிமுகமாகியுள்ளது.;
வாடிக்கையாளர் களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த வண்ணத்தில் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்போர்ட்டியர் மோட்டார் சைக்கிளுக்கே உரிய கம்பீரமான தோற்றம், அழகிய வடிவமைப்பு, கருப்பு வண்ணம் இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது. இது தவிர அழகிய நீல வண்ணத்திலும் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒற்றை இருக்கை இதன் சிறப்பம்சமாகும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.60 லட்சம்.