எட்டி உதைத்தால் 'ஷாக்' அடிக்கும்..!
பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில், கேரளாவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் மின்சார காலணியைக் கண்டுபிடித்து அசத்தி இருக்கிறார்.;
பெண்கள் மீது உடல் ரீதியாக நடத்தப்படும் பாலியல் வன்முறை போன்ற சம்பவங்களில் இருந்து அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள மிளகாய் ஸ்பிரே போன்ற சாதனங்கள் உள்ளன.
இந்தநிலையில், தவறாக நடக்க முயல்வோரை தடுத்து நிறுத்தி, விரட்டி அடிக்கும் வகையில் மின்சார காலணியை கண்டுபிடித்து இருக்கிறார் 10-ம் வகுப்பு மாணவியான விஜயலட்சுமி. தனது கண்டுபிடிப்பு குறித்து அவர் பேசுகையில், "பெண்ணை யாராவது தாக்க முற்படும்போது அல்லது பாலியல் சீண்டலுக்கு ஆளாகும்போது, அந்தப் பெண் இந்த பிரத்யேக காலணியால் எதிராளியை உதைக்க வேண்டும்.
காலணியில் இருந்து வெளியேறும் மின்சாரம் எதிராளி மீது பாய்ந்து அவரை நிலைகுலையச் செய்து விடும். மின்சார பேட்டரிகளுடன் இந்தக் காலணி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. குற்றவாளிகளை எதிர்த்துப் போராட பெண்களுக்கு இது உதவியாக இருக்கும். இந்த காலணியை அணிந்து கொண்டு நடக்கும்போது பேட்டரியில் சார்ஜ் ஏறும்'' என்றார்.
இது தவிர, மின்சார காலணியில் ஜி.பி.எஸ். வசதி இருப்பதால், அதை அணிந்து செல்லும் பெண் எங்கு இருக்கிறார் என்பதை பெற்றோர் அல்லது நண்பர்கள் அறிந்து கொள்ள முடியும்.
பெண்களுக்கான பிரத்யேக காலணியை உருவாக்கும் முயற்சியை விஜயலட்சுமி 2018-ல் தொடங்கினார். அவரது இந்தக் கண்டுபிடிப்பு பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இவரது கண்டுபிடிப்பு விருதுகளை வென்றுள்ளது.
மின்சார காலணியில் ஜி.பி.எஸ். வசதி இருப்பதால், அதை அணிந்து செல்லும் பெண் எங்கு இருக்கிறார் என்பதை பெற்றோர் அல்லது நண்பர்கள் அறிந்து கொள்ள முடியும்.