மண்ணில்லா சாகுபடி- செங்குத்து தோட்டம்
செங்குத்து தோட்டம் என்பது சுவர் போன்ற செங்குத்து கட்டமைப்புகளில் தாவரங்களை நடவு செய்து அழகான தோட்டத்தை உருவாக்குவதாகும்.;
நகர்ப்புற மக்கள் தங்களது அன்றாட காய்கறி மற்றும் கீரை தேவைகளை பூர்த்தி செய்ய ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் செங்குத்துத்தோட்டம் நவீன தொழில்நுட்பமாக விளங்குகிறது. இதற்கும் தோட்டக்கலைத்துறையால் மானியம் வழங்கப்படுகிறது. செங்குத்து தோட்டம் என்பது சுவர் போன்ற செங்குத்து கட்டமைப்புகளில் தாவரங்களை நடவு செய்து அழகான தோட்டத்தை உருவாக்குவதாகும்.
ஹைட்ரோபோனிக்ஸ் அல்லது நீரியல் வளர்ப்பு என்பது மண்ணில்லா வேளாண்மை ஆகும். மண் இல்லாமல் கனிம ஊட்டக்கூறுகளைக் கொண்ட நீர்ம வளர்ப்பூடக கரைசல்களைப் பயன்படுத்தி தாவரங்களை வளர்க்கும் ஒரு முறையாகும். இந்த முறையிலும் கீரைகள் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்யலாம்.