இரும்பு ஆலையில் பணி
இரும்பு ஆலையில் பல்வேறு பிரிவுகளில் 259 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.;
தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சேலம் இரும்பு ஆலை, சத்தீஸ்கரில் உள்ள பிலாய் இரும்பு ஆலை, மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சந்திராபூர் பெரோ அலாய் ஆலைகளில் அட்டெண்டன்ட் கம் டெக்னீசியன், ஆபரேட்டர் கம்டெக்னீசியன், பயர்மேன் கம் பயர் என்ஜின் டிரைவர், பிளாஸ்டர், சர்வேயர், போர்மேன், உதவி மேலாளர், மேலாளர், மருத்துவ அதிகாரி, ஆலோசகர் உள்பட பல்வேறு பிரிவுகளில் 259 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பும், பணி அனுபவமும் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் தன்மைக்கேற்ப 28 முதல் 44 வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் விதம், தேர்வு செய்யப்படும் நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை http://sailcareers.com என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-12-2022.