மயங்கி கிடந்த தெருநாய்க்கு சிபிஆர் முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய மனிதர் - வைரலாகும் வீடியோ!
எவ்வளவு முயற்சி செய்தாலும், அந்த நாயால் சுவாசிக்க முடியவில்லை. இருப்பினும், அவர் நாயின் உயிரை காப்பாற்ற தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.;
தெருநாய்க்கு சிபிஆர் எனப்படும் இதய நுரையீரல் மறுமலர்ச்சி சிகிச்சை (சிபிஆர்) முதலுதவி சிகிச்சையளித்து, ஒருவர் அதன் உயிரை காப்பாற்றிய சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது.
பொதுவாக, தெரு நாய்களை மக்கள் சந்திக்கும் போது, அவற்றின் அவல நிலையை அலட்சியப்படுத்துவோம். இருப்பினும், மனிதர்கள் விலங்குகள் மீது வெறுப்பை காட்டக்கூடாது என்பதற்கு வீடியோவில் இருக்கும் மனிதர் ஒரு உதாரணமாகி உள்ளார்.
உயிருக்கு போராடிக் கொண்டு சாலையில் மயங்கி கிடந்த தெருநாய் ஒன்றை, அந்த மனிதர் கண்டு அதன் மீது இரக்கப்பட்டுள்ளார். அதன் நெஞ்சை அழுத்தி, சிபிஆர் முதலுதவி சிகிச்சையளித்து உயிரை காப்பாற்ற போராடினார்.
ஆரம்பத்தில் எவ்வளவு முயற்சி செய்தாலும், அந்த நாயால் சுவாசிக்க முடியவில்லை. இருப்பினும், முயற்சியை விட்டுவிடாமல், அவர் நாயின் உயிரை காப்பாற்ற தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அதன் பயனாக, அந்த நாய் பிழைத்துக் கொண்டது.
இந்த மனிதர் இல்லாவிட்டால் அந்த நாய் பரிதாபமாக இறந்திருக்கும். இந்த வீடியோவை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து, அந்த மனிதரை பாராட்டியுள்ளனர்.
இது குறித்து ஒருவர் தெரிவித்துள்ளதாவது, "மிகச்சிறப்பு. எல்லோரும் இப்படி இருந்தால் இந்த பூமி சொர்க்கமாக மாறிவிடும். அனைவரையும் நேசியுங்கள், நலமாக வாழுங்கள். அந்த அசாதாரண நபரை கடவுள் ஆசீர்வதிப்பாராக" என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.