ஜிப்மர் மருத்துவமனையில் 433 நர்சிங் அதிகாரி பணியிடங்கள்

புதுச்சேரியில் இயங்கும் ஜிம்பர் மருத்துவமனையில் 433 நர்சிங் அதிகாரி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.;

Update: 2022-11-13 11:27 GMT

பி.எஸ்.சி. நர்சிங் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் நர்சிங் சார்ந்த படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நர்சிங் படித்திருப்பதை பதிவு செய்திருக்க வேண்டும். 50-க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட ஆஸ்பத் திரியில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

1-12-2022 அன்றைய தேதிப்படி 18 முதல் 35 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறனறிவு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 1-12-2022. மேலும் விரிவான விவரங்களை https://jipmer.edu.in/ என்ற இணைய பக்கத்தில் பார்வையிடலாம்.

Tags:    

மேலும் செய்திகள்