உலகின் விலை உயர்ந்த திராட்சை

உலகிலேயே விலை உயர்ந்த திராட்சைப் பழம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது, ‘ரூபி ரோமன் கிரேப்ஸ்’.;

Update:2022-12-23 14:17 IST

திராட்சைப்பழங்களில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் உலகிலேயே விலை உயர்ந்த திராட்சைப் பழம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது, 'ரூபி ரோமன் கிரேப்ஸ்'. இது ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே விளைவிக்கப்படுவது சிறப்பம்சம்.

இந்த திராட்சைப் பழம், குறைந்த அளவு அமிலத்தன்மை கொண்டது. அதிக சர்க்கரை உள்ளது. மற்ற திராட்சைப் பழங்களுடன் ஒப்பிடும்போது அதிக சாறும் உள்ளடங்கி இருக்கும். ஒரு திராட்சைப் பழம் சுமார் 20 கிராம் எடையும், 3 செ.மீ. விட்டமும் கொண்டிருக்கும்.

இந்த 'ரூபி ரோமன்' திராட்சையை ஜப்பான் விவசாயி சுடோமு டேக்மோரி உற்பத்தி செய்து 2008-ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வந்தார். சுமார் 14 வருட உழைப்பிற்கு பிறகே அந்த திராட்சை விளைந்தது. அதற்கேற்ப திராட்சைக்கு மவுசும் ஏற்பட்டது. ஒரு கொத்து திராட்சை மட்டுமே சுமார் 910 டாலருக்கு விற்கப்பட்டது. அப்போதைய இந்திய மதிப்பில் அது சுமார் 70 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இந்த திராட்சையின் பிரமாண்ட தோற்றமும், அதில் அடங்கி இருக்கும் ஊட்டச்சத்துக்களும் அதன் மதிப்பை நாளுக்கு நாள் அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கிறது. 2019-ம் ஆண்டு ஒரு கொத்து திராட்சை 10 ஆயிரம் யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்) விற்கப்பட்டது. 2021-ம் ஆண்டு அதன் விலை ரூ.10 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்