வெண்பனி போர்த்திய 25 ஆயிரம் அடி உயர மலைச்சிகரத்தில் ஏறி இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை குழு சாதனை..!
24,131-அடி உயர அபி கமின் சிகரத்தில் ஏறி இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் மலையேற்ற வீரர்கள் குழு சாதனை படைத்துள்ளது.;
புதுடெல்லி,
இந்திய-சீனப் போருக்கு மத்தியில், 1962இல் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை (ஐ.டி.பி.பி) உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை (ஐ.டி.பி.பி), 230க்கும் மேற்பட்ட மலையேறுதல் பயணங்களை வெற்றிகரமாக முடித்த தனிச்சிறப்பு பெற்றுள்ளது.
அந்த வகையில் சமீபத்திய சாதனையாக, 24,131-அடி உயர அபி கமின் சிகரத்தில் ஏறி இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் மலையேற்ற வீரர்கள் குழு சாதனை படைத்துள்ளது.
மலையேறும் குழுவினர் தங்களது வெற்றியைக் கொண்டாடும் வகையில் சிகரத்தின் உச்சியில் இந்திய தேசியக் கொடியை ஏற்றினர்.
முன்னதாக கடந்த ஆண்டு, அக்டோபர் 9 ஆம் தேதி, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையும் (ஐடிபிபி) லடாக் காவல்துறையும் இணைந்து, கிழக்கு லடாக்கில் பெயரிடப்படாத இரண்டு 6,000 மீட்டர் (20 ஆயிரம் அடி) உயர மலை சிகரங்களை வெற்றிகரமாக அடைந்து முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.