ஹோண்டா ஆக்டிவா பிரீமியம் எடிஷன்

இருசக்கர வாகனங்களில் அனைத்து பிரிவினரிடம் பெருமளவு வரவேற்பைப் பெற்ற மாடலாக ஹோண்டா ஆக்டிவா திகழ்கிறது. இதில் தற்போது பிரீமியம் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-31 08:41 GMT

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.75,400. கண்ணைக் கவரும் பிரத்யேக வண்ணங்களில் கிடைப்பது சிறப்பாகும்.

வாகனத்தின் சில பகுதிகள் தங்க நிறத்தில் ஜொலிக்கும் வகையில் இது உருவாக்கப் பட்டுள்ளது. அதேபோல சில பகுதிகள் குரோமியம் பாகங்களாக ஜொலிக்கின்றன. இது வாகனத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது. இருக்கை பிரவுன் நிறத்திலும், உள்புற பகுதி பிரவுன் நிறத்திலும் உள்ளது இதன் முந்தைய மாடலை விட இதை தனித்துவம் மிக்கதாகக் காட்டுகிறது. 109.5 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜினைக் கொண்டது.

இது 7.7 ஹெச்.பி. திறனை 8 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும், 8.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 5,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். டெலஸ்கோப்பிக் போர்க், மூன்று நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும்வகையிலான ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் இதன் சிறப்பம்சமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்