மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9223 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.;

Update:2023-03-19 18:38 IST

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்) கான்ஸ்டபிள் (டெக்னிக்கல் மற்றும் டிரேட்ஸ்மேன்) பணி பிரிவுகளில் டிரைவர், எலெக்ட்ரீஷியன், பிளம்பர், மோட்டார் மெக்கானிக், கார்பெண்டர், பெயிண்டர், தோட்டக்காரர், சமையலர், சிகை அலங்கார நிபுணர் உள்பட பல்வேறு காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,223 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் சம்பந்தப்பட்ட பணி சார்ந்த சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

டிரைவர் பணிக்கு 21 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணி இடங்களுக்கு 18 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத்தகுதியானவர்கள்.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, சேலம், தேனி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-4-2023.

விண்ணப்பிக்கும் விதம் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://crpf.gov.in/ என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம்.

Tags:    

மேலும் செய்திகள்