மலர் தேசம்

இது வெளிநாட்டில் இருக்கும் ஏதோ ஒரு இடம் என்று நினைத்து விடாதீர்கள். வடமாநிலமான மேகாலயாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஷில்லாங்தான் புது அடையாளத்துடன் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

Update: 2022-11-20 12:48 GMT

இது வெளிநாட்டில் இருக்கும் ஏதோ ஒரு இடம் என்று நினைத்து விடாதீர்கள். வட மாநிலமான மேகாலயாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஷில்லாங்தான் புது அடையாளத்துடன் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணமானவை செர்ரி பூக்கள். இளஞ்சிவப்பு நிறத்தில் அடுக்கடுக்கான சிறு மலர்களாக காட்சி அளிக்கும் இவை சகுரா என்றும் அழைக்கப்படுகின்றன. ப்ரூனஸ் இனத்தின் துணை வகையை சேர்ந்த மரங்களில் இவை பூத்துக்குலுங்கும்.

ஜப்பானில்தான் செர்ரி பூக்கள் அதிகம் மலர்கின்றன. சீனா, கொரியா உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளிலும் இவற்றை காணலாம். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை சிக்கிம், நாகலாந்து, உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பூக்கும். அந்த சமயத்தில் அங்கு நிலவும் சீதோஷண நிலை செர்ரி பூக்கள் மலர்வதற்கு உகந்ததாக இருக்கும்.

தென்னிந்திய பகுதிகளிலும் செர்ரி பூக்கள் மலரும் இடங்கள் இருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க நகரம், பெங்களூரு. அங்கு நிலவும் கால நிலையும் செர்ரி மலர் இன மரங்களின் வளர்ச் சிக்கு உகந்ததாக அமைந்திருக்கும்.

தற்போது ஷில்லாங் பகுதி முழுவதும் செர்ரி பூக்கள் மலர்ந்துள்ளன. அவற்றை பலரும் பார்த்து ரசித்து, புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். தாங்கள் வெளிநாட்டில் இருப்பது போன்ற சூழலை உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்