பி.எம்.டபிள்யூ.எம் 340.ஐ எக்ஸ்டிரைவ் 50
பிரீமியம், சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிதாக எம் 340.ஐ எக்ஸ்டிரைவ் 50 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.;
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.68,90,000. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் பிரத்யேக வண்ணங்களில், இதற்கான கிட்னி வடிவிலான கிரில் மெஷ்ஷுடன் இது வந்துள்ளது.
வித்தியாசமான முகப்பு விளக்கு அதில் பகலில் ஒளிரும் எல்.இ.டி. விளக்கு, ஜன்னல் பகுதியைச் சுற்றி கருப்பு பூச்சு, கண்ணாடிகளுக்கு மேல் மூடி, 19 அங்குல அலாய் சக்கரம், சக்கரத்துக்கான ஹப் மூடி, அடாப்டிப் எல்.இ.டி. விளக்கு உள்ளிட்டவை இதன் சிறப்பு அம்சங்களாகும். சவுகரியமாக பயணிக்கும் வகையிலான இதன் உள்பகுதி வடிவமைப்பு, டிரைவருக்கென பிரத்யேக வசதிகளைக் கொண்டதாக வந்துள்ளது. இதேபோல உள்புற விளக்குகளின் வெளிச்ச அளவை 6 நிலைகளில் கூட்டவோ, குறைக்கவோ முடியும். தானியங்கி முறையிலான குளிர்சாதன வசதி பயணத்தை மேலும் மகிழ்ச்சியாக்குகிறது. 2,988 சி.சி. திறன் கொண்ட 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது.
இது 387 ஹெச்.பி. திறனையும், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இதனால் ஸ்டார்ட் செய்து 4.4 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். அனைத்து சக்கர சுழற்சி, பிரத்யேக சஸ்பென்ஷன் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். வர்ச்சுவல் அசிஸ்டென்ட் வசதி கொண்டது. வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி, பார்க்கிங் அசிஸ்டென்ட், பின்புற கேமரா உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளன. இனிய இசையை வழங்க ஹர்மான் கார்டோன் சரவுண்ட் சிஸ்டம் உள்ளது.