பிளாபுங்க்ட் பி.இ 100. நெக்பேண்ட்

ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் பிரபலமான பிளாபுங்க்ட் நிறுவனம் பி.இ 100. என்ற பெயரில் நெக்பேண்ட் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.;

Update: 2022-07-14 12:46 GMT

சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் கொண்டது. ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை துல்லியமாக உணர்த்தும். இயர்போனை பயன்படுத்தாத நிலையில் அதிர்வு மூலமாக உணர்த்தும். உங்கள் ஸ்மார்ட்போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் அழைப்புகளை உணர்த்தும். இதில் உள்ள பேட்டரியின் திறனை எல்.சி.டி. மூலமாக தெரிந்துகொள்ள முடியும். 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 10 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. காந்த விசை முனைகளையும், வியர்வை, தூசி புகா தன்மை கொண்டதாகவும் இது வந்துள்ளது. வயர்லெஸ் முறையில் செயல்படுகிறது. நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.999.

Tags:    

மேலும் செய்திகள்