அமேஸ்பிட் பால்கன் ஸ்மார்ட் கடிகாரம்
அமேஸ்பிட் நிறுவனம் பால்கன் மாடல் ஸ்மார்ட் கடிகாரங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.;
பிரீமியம் மாடல் ஸ்போர்ட் கடிகாரத்தை இந்நிறுவனம் முதல் முறையாக இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜி.பி.எஸ். வசதியுடன் விமானங்களில் பயன்படுத்தப் படும் உறுதியான டைட்டானியம் உலோகத்தால் ஆன மேல்பாகத்தைக் கொண்டது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடல் பயிற்சி முறைக்கேற்ப, அதை சிறப்பாக செயல் படுத்துவதற்கான வழி வகைகளையும் இது வழங்கும். 150-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் எதில் ஈடுபட்டாலும் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவைத் துல்லியமாகக் காட்டும். புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. 1.28 அங்குல வட்ட வடிவிலான டயலைக் கொண்டது. இதில் 500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை செயல்படும். இதன் விலை சுமார் ரூ.44,999.