புதுப் பொலிவுடன் ஆல்டோ கே 10

மாருதி சுஸுகி நிறுவனத் தயாரிப்புகளில் ஆல்டோ மாடல் மிகவும் பிரபலமானது. இதில் கே 10 மாடல் இப்போது மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டதாக அறிமுகம் ஆகியுள்ளது.;

Update:2022-08-31 13:58 IST

வெளிப்புறத்தில் மாற்றங்கள், அதிக இடவசதி, மிகச் சிறந்த செயல்பாடு ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். சவுகரியம், பாதுகாப்பு, இணைப்பு தொழில்நுட்ப வசதிகள் ஆகியன இதில் கூடுதலாக இடம்பெற்றுள்ளன.

இதில் 1 லிட்டர் டியூயல் ஜெட் வி.வி.டி. என்ஜின் உள்ளது. நகர்ப்புற போக்குவரத்துக்கு ஏற்ற வகையிலான அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் என்ஜின் 66.6 பி.எஸ். திறனை 5,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 3,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 24.90 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் மாடலாக 5 கியர்களைக் கொண்டதாக இது வந்துள்ளது. 6 வேரியன்ட் களில் வந்துள்ள இந்த மாடலின் ஆரம்ப விலை சுமார் ரூ.3.99 லட்சம். பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.5.83 லட்சம்.

Tags:    

மேலும் செய்திகள்