வெண்மை புரட்சி
உலகின் மிகப் பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா விளங்குகிறது. 2019-20-ம் ஆண்டில் 198.4 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. 2018-19-ம் ஆண்டை ஒப்பிடும்போது பால் உற்பத்தி 6 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.;
உலக உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 22 சதவீதமாக இருக்கிறது. இன்று பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கும் இந்தியா, 1950-1960-ம் ஆண்டு களில் பால் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொண்டது. பிற நாடுகளில் இருந்து பாலை இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது. பால் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் 1965-ம் ஆண்டு காலகட்டத்தில் தேசிய பால் மேம்பாடு வாரியத்தை நிறுவுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் பால் உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்நிறுவனம் செயல்பட தொடங்கியது. நாடு முழுவதும் பால் உற்பத்தியை
ஒழுங்குபடுத்தும் வகையில் பால் கூட்டுறவு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதோடு 1998-ல், அமெரிக்காவை விஞ்சி உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா மாறியது.
பால் உற்பத்தியில் உத்தரபிரதேசம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. அதற்கு அடுத்த இடங்களில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்கள் உள்ளன. நாட்டின் மொத்த பால் உற்பத்தி யில் எருமை மாட்டு பாலின் பங்களிப்பு சுமார் 35 சதவீதமாக உள்ளது. கலப்பின பசுக்களின் பங்களிப்பு 26 சதவீதமாக இருக்கிறது. நாட்டு மாடுகளின் பங்களிப்பு 10 சதவீதமாக உள்ளது.
மேலும் ஆட்டு பாலின் பங்கு 3 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் பால் துறை மிகப் பெரிய வளர்ச்சியையும், சாதனையையும் படைக்க ‘மில்க் மேன்’ என்று அழைக்கப்படும் குரியன் அளித்த பங்களிப்பு மகத்தானது. பால் பற்றாக்குறையை நிலவிய நிலையை மாற்றி இந்தியாவை உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உருவாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்து தரப்பினரின் பாராட்டை பெற்றன. அதன்படி, பால் உற்பத் தியை பெருக்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டது. அந்த திட்டம் வெண்மைப் புரட்சி என்ற பெயரில் பால் உற்பத்தியில் மகத்தான வளர்ச்சியை ஏற்படுத்தியது.