போர்ட்ரானிக்ஸ் பீம் 200 பிளஸ் புரொஜெக்டர்
போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக பீம் 200 பிளஸ் என்ற பெயரில் எல்.இ.டி. புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.;
நுகர்வோர் மின்னணு சாதன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக பீம் 200 பிளஸ் என்ற பெயரில் எல்.இ.டி. புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது. வை-பை இணைப்பு வசதி கொண்டது. இதன் மூலம் 150 அங்குல அளவுள்ள திரை வரை காட்சிகளை பெரிதுபடுத்திப் பார்க்கமுடியும்.
இதில் உள்ளீடாக 4 வாட் ஸ்பீக்கரும் உள்ளது. இதில் வி.ஜி.ஏ. போர்ட், யு.எஸ்.பி. போர்ட், ஹெச்.டி.எம்.ஐ., எஸ்.டி. கார்டு ஸ்லாட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. லேப்டாப், பி.சி., டேப்லெட், எக்ஸ் பாக்ஸ், பிளே ஸ்டேஷன் உள்ளிட்டவற்றுடன் இதை இணைத்து செயல்படுத்த முடியும். இதன் விலை சுமார் ரூ.19,999.