பிரதமர் மோடியுடன் எடியூரப்பா சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியுடன் எடியூரப்பா சந்தித்து பேசினார்.
பெங்களூரு:
கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா வயது மூப்பு காரணமாக அப்பதவியில் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு விலகினார். அவர் அரசியலலில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாகவே கருதப்பட்டார். அவருக்கு 80 வயது ஆனாலும் கட்சி மேலிடம் அவருக்கு புதிய பதவி வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அவருக்கு கட்சியின் உயர்நிலை குழு மற்றும் தேர்தல் குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து எடியூரப்பா நேற்று டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் எடியூரப்பா நேரில் சந்தித்து பேசினார். அப்போது தனக்கு கட்சியில் புதிய பதவி வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொண்டார். அப்போது மோடி, கர்நாடகத்தில் வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க பாடுபடுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.