தந்தை, சகோதரனிடம் ரூ.50 லட்சம் மோசடி பெண்

ஆனேக்கல் அருகே வீட்டில் புதையல் இருப்பதாக ஆசைகாட்டு தந்தையையே, கணவனுடன் சேர்ந்து இளம்பெண் ஒருவர் மோசடி செய்து ரூ.50 லட்சத்தை பறித்த சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-09-06 22:28 GMT

ஆனேக்கல்:-

விவசாயி

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா பந்தர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் திம்மராயப்பா. விவசாயி. இவரது மகன் பிரதீப் குமார். திம்மராயப்பாவுக்கு பிரதீப் குமாரை தவிர, 2 மகள்களும் உள்ளனர். அதில் மூத்த மகள் மஞ்சுளா. அவரது கணவர் மஞ்சுநாதா. இந்த நிலையில் திம்மராயப்பா தனது சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய மகன் பிரதீப் குமாரின் பெயரில் மாற்றினார். இது அவரது 2 மகள்களுக்கும் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரதீப் குமார் தொழில் தொடங்க எண்ணினார். இதற்காக அவர் ரூ.50 லட்சம் திரட்ட எண்ணினார். அப்போது பிரதீப் குமாரிடம், அவரது சகோதரி மஞ்சுளாவும், அவருடைய கணவர் மஞ்சுநாதாவும் பேசினர்.

ரூ.50 லட்சம்

மேலும் வீட்டில் புதையல் இருப்பதாக நம்ப வைத்தனர். புதையலில் நிறைய பணம், நகைகள், வெள்ளி பொருட்கள் கிடைக்கும் என்றும் நம்ப வைத்தனர். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த நவீன் என்ற சாமியாரை வரவழைத்து வீட்டில் யாகம் நடத்தி புதையலை தேடினர். இதற்காக சிறப்பு பூஜை செய்தனர். இந்த சிறப்பு பூஜை செய்த சாமியாருக்கு பணம் கொடுக்கவேண்டும் என்று ரூ.50 லட்சம் வாங்கினர். ஆனால் அந்த பணத்தை சாமியாருக்கு கொடுக்கவில்லை. இதுகுறித்து தந்தை மற்றும் சகோதரனுக்கு தெரியவந்தது. அவர்கள் இதுகுறித்து ஆனேக்கல் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பதியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்